பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும், தகவலும் வைராகி டிரெண்டாகி வரும் நிலையில், இன்று நடிகர் ஷாருக்கான் ‘ஜவான்’ படத்தின் வெளியீட்டு கவுண்டவுனை துவக்கி வைத்துள்ளார்.
'ஜவான்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது, இந்த போஸ்டர் மிகப்பெரிய வெளியீட்டிற்கான இறுதி கவுண்டவுனாக அமைந்துள்ளது. இப்படத்தின் முந்தைய அறிவிப்புகள், ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியதோடு, பார்வையாளர்களிடமிருந்து பெரும் அன்பையும் பெற்றது.
ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, கெளரி கான் தயாரிப்பில், கெளரவ் வர்மா இணை தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘ஜவான்’ இன்னும் ஒரு மாதத்தில் அதாவது வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...