Latest News :

அனைத்து தரப்பினருக்குமான படமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் - ‘வான் மூன்று’ பட இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ்
Tuesday August-08 2023

அறிமுக இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கத்தில், ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அம்மு அபிராமி, அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ், லீலா தாம்சன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘வான் மூன்று’. சினிமாகாரன் சார்பில் வினோத்குமார் சென்னியப்பன் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை 11 அம தேதி ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

படம் குறித்து இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் பேசுகையில், “வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் பற்றி சொல்வதற்காகவே 'வான் மூன்று' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். அனைத்து வயதினரையும் கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்கள் இந்தக் கதையில் செய்தோம். பல நடிகர்களிடம் பேசி தான் இறுதியாக இந்தக் கதைக்குள் அபிராமி, ஆதித்யா எல்லாரும் வந்தார்கள். ஆனால், சித்ரா கேரக்டருக்கு லீலா மேம் தவிர்த்து, வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. இவர் தான் வேண்டும் என்று ஒரு மாதம் ஃபாலோ செய்து ஒத்து கொள்ள வைத்தேன். இது என்னுடைய முதல் படம் என்பதால், மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஃபீல் குட் படமாக உருவாக்கினேன். படத்தில் நடித்துள்ளவர்கள் டேட் இப்போது பிஸியாக உள்ளதால் அவர்களால் வர முடியவில்லை. நிச்சயம் அடுத்தடுத்த புரமோஷன்களில் கலந்து கொள்வார்கள்.” என்றார்.

 

நடிகை லீலா தாம்சன் பேசுகையில், ”இயக்குநர் இந்த கதை சொன்ன போது எனக்கு முதலில் புரியவில்லை. நேரில் சந்தித்து கதை சொன்ன போதுதான் நான் ஒத்துக் கொண்டேன். இந்தப் படத்தில் புதியவர்கள் போலவே அனுபவம் வாய்ந்தவர்களும் வேலை பார்த்திருக்கிறார்கள். அவர்களுடனும் டெல்லி கணேஷ் சாருடனும் இணைந்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி.” என்றார். 

 

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசுகையில், ”இந்தக் கதை கேட்டபோது நான் எதிர்பார்த்தபடி, என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதுவும் இல்லாமல் இந்த அணியினர் மிகவும் திறமையானவர்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால், தைரியமாக ஒத்துக் கொண்டேன்.” என்றார்.

 

எடிட்டர் அஜய் மனோஜ் பேசுகையில், ”மூன்று பேருடைய கதை என்பதால் என் எடிட்டிங் திறமையை வளர்த்துக் கொள்ளவும் புதிதாக கற்றுக் கொள்ளவும்  நிறைய விஷயங்கள் இதில் இருந்தது.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ் பேசுகையில், ”இந்தக் கதை ஹாஸ்பிடலில் நடந்ததால், முழுக்க அங்குள்ள ஒளிகளை வைத்தே மேனேஜ் செய்தோம். அது பலருக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.” என்றார்.

 

முன்னதாக இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் பீல் படமாக இருப்பதோடு, கணவன் மனைவி பாசம் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயம் அனைத்து தரப்பினரையும் படம் கனெக்ட் செய்யும், என்று கூறி பாராட்டினார்கள்.

Related News

9169

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery