Latest News :

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ‘மாயோன்’!
Friday August-11 2023

சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி ஆகியோரது நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘மாயோன்’. டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, திரைக்கதையும் எழுதியிருக்கிறார் அருண்மொழி மாணிக்கம். என். கிஷோர் கதை எழுதி இயக்கியிருக்கிறார். சி. ராமபிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ் இணைந்து படத்தொகுப்பு பணிகளை  கவனித்திருக்கின்றனர். 

 

கனடாவில் நடைபெற்ற 47வது டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புராண திரைப்பட விருதை வென்று, சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

 

திறமையான கலைஞர்கள் பாடிய மூன்று பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 'மாயோனே மணிவண்ணா..' எனத் தொடங்கும் பக்தி பாடலை பிரபல கர்நாடக இசை பாடகிகள் ரஞ்சனி -காயத்ரி பாடியிருந்தனர். பின்னணி பாடகர் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாசுடன் இணைந்து வசீகரிக்கும் கிருஷ்ணரை பற்றிய பாடலையும் பாடியுள்ளனர். இந்த தெய்வீக பாடல்களை அவர்கள் பாடியிருப்பது சிறப்பான திறமையை வெளிப்படுத்துவதுடன் அழகான இசை அனுபவத்தையும் தருகிறது. மேலும் பின்னணி பாடகர்கள் ஸ்ரீ நிஷா ஜெயசீலன் மற்றும் டி கே கார்த்திகேயன் இணைந்து, 'தேடித் தேடி..' எனத் தொடங்கும் காதல் தாலாட்டு பாடலுக்கு குரல் கொடுத்து இந்த பாடலுக்கு அழகு சேர்த்திருக்கிறார். 

 

இப்படத்தின் தெலுங்கு பதிப்பும் விரைவில் டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9172

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery