’சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன், ‘தெகிடி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தொடர் வெற்றிகளை கொடுத்து கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார்.
’ஓ மை கடவுளே’, ‘மன்மதலீலை’, ‘போர் தொழில்’ என்று அசோக் செல்வன் நடிக்கும் படங்கள் தொடர் வெற்றி பெற்று வருவதால் தற்போது அவர் கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது.
இந்த நிலையில், அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ஆம், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை தான் அவர் மணக்க இருக்கிறார்.

’தும்ப’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தார்களாம். தற்போத் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதால் திருமணம் செய்யவிருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் சென்னையில் நடக்க இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை இருவரும் சேர்ந்து அறிவிக்க இருக்கிறார்கள்.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...