Latest News :

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் தொடங்கியது
Friday August-18 2023

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் இன்று ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.

 

சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம் மற்றும் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு, இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கண்ணப்பாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய பக்தியின் மகிமை குறித்து பல ஆச்சரியமான மற்றும் அதிசய தகவல்களை சேகரித்தவர், அவற்றைக் கொண்டு பிரமாண்டமான பான் இந்திய திரைப்படத்தை கொடுப்பதற்கான வேலையை தொடங்கியுள்ளார்.

 

24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.மோகன் பாபு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமான காவியமாக உருவாக இருக்கும் இப்படத்தில் கண்ணப்பா வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். கதையின் நாயகியாக நுபுர் சனோன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

Kannappa Movie Pooja

 

பிரபல எழுத்தாளர்கள் பருச்சுரிகோபாலகிருஷ்ணா, தோட்டா பிரசாத், தோட்டப்பள்லி சாய்நாத், புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.  மணிசர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸே இசையமைக்கின்றனர். ஷெல்டன் ஷா ஒளிப்பதிவு செய்ய, சின்னா கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

 

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘மஹாபாரதம்’ தொடரை இயக்கிய முகேஷ் சிங் ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படத்தை இயக்குகிறார்.

 

இந்திய சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் இன்றி ஹாலிவுட் சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றும் இப்படம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக மட்டும் இன்றி உலக மக்களையும் கவரும் வகையில் பிரமாண்டமான படைப்பாக உருவாக உள்ளது.

 

இப்படம் குறித்து கூறிய நடிகர் விஷ்ணு மஞ்சு, “மிகுந்த உற்சாகத்துடனும், பெருமிதத்துடனும், எனது நேசத்துக்குரிய படைப்பான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ படத்தை தொடங்கியிருக்கிறேன். இந்த திரைப்படம் தலைசிறந்த படைப்பாகவும், அன்பின் உழைப்பாகவும் பல ஆண்டுகளாக கவனமாக வளர்க்கப்பட்டது. ‘கண்ணப்பாவின்’ ஆழமான கதை பல தலைமுறைகளாக சினிமா ரசிகர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம், காலங்காலமாக ஆழ்ந்த பயபக்தியை பெற்றுள்ளது.

 

இந்தப் படம் என்னுடைய அடங்காத ஆர்வத்திற்குச் சான்றாக நிற்கிறது. இது பல்வேறு இந்தியத் திரைப்படத் தொழில்களில் இருந்து புகழ்பெற்ற நடிகர்களைக் கொண்டு, பெரிய அளவில் வெளிவரும் வகையில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய சினிமாவில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முயற்சிகளில் ஒன்றாக இருக்கும்.

 

அசைக்க முடியாத பக்தி மற்றும் அதன் மகத்துவத்தின் வெளிச்சத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த கதையில், கண்ணப்பாவின் பிரமிக்க வைக்கும் மாற்றமும் அடங்கியுள்ளது. ஆரம்பத்தில் நாத்திகராக இருந்தவர், ஆழ்ந்த உருமாற்றத்திற்கு உட்பட்டு சிவபெருமானின் உறுதியான பக்தராக மாறினார். அவரது பக்தி தற்கால மற்றும் கலாச்சார எல்லைகளில் எதிரொலிப்பதோடு, வரலாற்றின் மிகவும் விதிவிலக்கான பக்தர்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை உறுதிப்படுத்துகிறது. இந்த அசாதாரண பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனக்கு பெருமையாக இருப்பதோடு, அதை என் பாக்கியமாகவும் கருதுகிறேன்.

 

Kannappa Movie Pooja

 

இணையற்ற திறமையின் ஒருங்கிணைப்பு, எழுத்தாளர்களின் கதை நிபுணத்துவம், நுணுக்கமான கைவினைத்திறன், சமரசம் செய்யாத தொழில்நுட்பத் தரங்களில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை ’கண்ணப்பா’-வை கலைப் புத்திசாலித்தனத்தின் புதிய உச்சங்களுக்கு உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. உச்சக்கட்டமாக, காலப்போக்கில் எதிரொலிக்கும் ஒரு மறக்க முடியாத தலைசிறந்த படைப்பாகவும், தற்போதைய தலைமுறையை வசீகரிக்கும் பக்தி படைப்பாகவும் ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ இருக்கும்.” என்றார்.

Related News

9186

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery