‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கிக்’. பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தை பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கியிருக்கிறார். இதில் நாயகியாக தன்யா ஹோப் நடிக்க, ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை ரவிவர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டிலோ வடிவமைத்துள்ளனர். ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.
வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டு படம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்கள்.
நடிகர் சந்தானம் படம் குறித்து பேசுகையில், ”தயாரிப்பாளர் நவீன் ராஜ் மற்றும் இயக்குனர் பிரசாந்த்ராஜ் இருவரும் என்னை பாண்டிச்சேரி வரை தேடிவந்து கண்டுபிடித்து கதை சொன்னார்கள். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரே கட்ட படப்பிடிப்பாக சென்னையில் ஆரம்பித்து பாங்காங்கில் பூசனிக்காயெய் உடைத்து, ஒரேகட்ட படபிடிப்பாக இந்த படத்தை நடத்தி முடித்தனர். இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். ஒரு பொண்ணுக்கும் பையனுக்குமான காதல் ஈகோ என்கிற, வெற்றிக்கு உத்தரவாதம் தருகின்ற கான்செப்ட்டில் தான் இந்த படம் உருவாகியுள்ளது.
பல ஹீரோக்களின் படங்களில் நான் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோ கூடவே இருந்து கதையை நகர்த்திச் செல்ல உதவி இருக்கிறேன். அப்படி இந்த படத்தில் தம்பி ராமையா அண்ணன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு டிவியில் ஒளிபரப்பான நிஜாம் பாக்கு விளம்பரத்தில் வருவது போல காட்சிக்கு காட்சி விதவிதமாக முகத்தை மாற்றி எக்ஸ்பிரஸன்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்.
மன்சூர் அலிகான் சார் ஒரு குழந்தை என்று சொல்லலாம். ஹாலிவுட் படத்தில் ஒரு கிங்காங்கிடம் இளம்பெண் மாட்டிக்கொண்டது போல, இந்தப் படத்தில் மன்சூர் அலிகானிடம் நடிகர் கிங்காங் மாட்டிக்கொண்டார். அரண்மனை படத்திற்கு பிறகு கோவை சரளா அக்காவுடன் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் எங்களுக்கான வசனங்கள் ஒர்க் அவுட் ஆனது போல இதிலும் வசனங்கள் இருக்கின்றன.
எவ்வளவோ படங்களில் நடித்துள்ள எனக்கு இத்தனை வருடங்களில் இப்போதுதான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள், எப்போதும் என்னை சுற்றி பெண்கள் தான் இருப்பார்கள், என ஆச்சரியப்பட்டு என்னிடம் சொன்னார் செந்தில் அண்ணன். படப்பிடிப்பில் இருந்தே நடிகர் கவுண்டமணி அண்ணனுக்கு போன் செய்து அந்த தகவலை கூறி மகிழ்ந்தார்.
கர்நாடகாவின் அனிருத் என்று சொல்லும் அளவுக்கு.. அங்கே பெரிய ஹீரோக்களுடன் வேலை செய்து வரும் பிரபலமான இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். பாங்காங்கில் சண்டைக்காட்சிகளை படமாக்கியபோது டேவிட் கேஸ்ட்டிலோ மாஸ்டர் முதல் நாளே பக்காவாக எனக்கு சண்டை ரிகர்சல் கொடுத்து விட்டு தான் படமாக்கினார்.
பாங்காங் போனாலும் எல்லோரும் ஏகபத்தினி விரதன்களாக இருந்ததால் எங்கேயும் ஊர் சுற்றவில்லை. டிடி ரிட்டன்ஸ் படத்துடன் இதை ஒப்பிட வேண்டாம். இந்த கிக் வேற மாதிரி இருக்கும். சொல்லப் போனால் இது சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த் ராஜ் படம் என்று தான் சொல்ல வேண்டும்” என்றார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...