மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில், ஏ.குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘வெப்பன்’. சத்யராஜ், வசந்த் ரவி நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் தன்யா ஹோப் ஹோப் நாயகியாக நடித்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜிவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கனிகா, மைம் கோபி, இயக்குநர் வேலு பிரபாகரன், கஜராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
சஸ்பென்ஸ்- ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தைஉ புதிய டெக்னாலஜியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வரும் நிலையில், ’வெப்பன்’ படத்தின் சார்பில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை விளக்கம் பிரச்சார விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
#WearHelmetRally என்ற தலைப்பில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பிரச்சார இருசக்கர பேரணியில் நடிகர் வசந்த் ரவி, நடிகை தன்யா ஹோப், தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
சாலையில் வாகனம் ஓட்டும் போது பாதுகாப்பாக ஓட்டுவதும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்துவதே இந்த ரேலியின் நோக்கம். சென்னை ஓ.எம்.ஆர்-ல் தொடங்கிய இந்தப் பயணம் தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில் முடிந்தது. இதில் பங்கு கொள்ள ராயல் என்ஃபீல்ட் ரைடர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...