Latest News :

ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்த ‘அலங்கு’! - அரிய தகவல்களுடன் களம் இறங்கும் இயக்குநர் சக்திவேல்
Tuesday August-29 2023

தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி விநியோகம், தயாரிப்பு என பல தளங்களில் பயணிப்பவர் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல். ‘உறுமீன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தான் இயக்கும் திரைப்படங்கள் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும் என்பதில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார். அந்த வகையில், ‘உறுமீன்’ படத்தை தொடர்ந்து ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை இயக்கியவர் தற்போது, சுவாரஸ்யமான தகவலோடு, உண்மை சம்பவத்தை மையமாக வைத்த ஒரு திரைப்படத்துடன் மீண்டும் இயக்குநராக களம் இறங்குகிறார்.

 

தமிழக - கேரள எல்லை பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ஆக்‌ஷன் பாணி படத்தை இயக்கும் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல், அப்படத்திற்கு ‘அலங்கு’ என்று தலைப்பு வைத்துள்ளார். தலைப்பே கவனம் ஈர்க்கும் வகையில் இருப்பதால் இப்படத்தின் மீது இப்போதே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சரி, ‘அலங்கு’ என்றால் என்ன? என்பதே படு சுவாரஸ்யமான தகவலாக இருக்கிறது. ஆம், அலங்கு - என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும், ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் கால போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் , நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி  இருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

 

Alangu

 

ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் மேனன் நடிப்பில் வெளியான ‘செல்ஃபி’ திரைப்படத்தை தயாரித்த டி.சபரிஷ் மற்றும் எஸ்.ஏ.சங்கமித்ரா இணைந்து டிஜி ஃபிலிம் கம்பெனி மற்றும் மேக்னஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முழுக்க முழுக்க வனம் மற்றும் அப்பகுதிகளில் படப்பிடிப்பி நடத்தப்பட்டிருப்பதோடு, வனவிலங்குகளும் படத்தில் இடம் பெறுகிறது. இதற்காக படத்தில் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. அப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘அலங்கு’ படத்தின் முழு விபரம் விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளது.

 

Alangu

Related News

9211

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery