நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட புதிய படத்தின் அறிவிப்பு!
Saturday September-02 2023

கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் கிச்சா சுதீப், மற்ற மொழித் திரைப்படங்களில் மிரட்டலான வில்லனாக கவனம் ஈர்த்து வருவதோடு, தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகராக வலம் வருகிறார்.

 

இந்த நிலையில், கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படத்தை கன்னட திரையுலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஆர்.சி.ஸ்டுடியோஸ் தயாரிக்க, இப்படத்தின் திரைக்கதையை பிரபல கதை, திரைக்கதையாசிரியர் வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். இயக்குநர் ஆர்.சந்துரு இப்படத்தை இயக்குகிறார்.

 

ரசிகர்களுக்கு பிரத்யேக விருந்தாக  இப்படத்தின் டைட்டிலை வெளியிட ஆர் சி ஸ்டுடியோஸ்  நிறுவனம் திட்டமிட்டிருப்பதோடு, பான் இந்தியா திரைப்படம் என்பதை தாண்டி குளோபல் திரைப்படம் என்ற ரீதியில் மிகப்பெரிய படமாக இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ஆர்சி ஸ்டுடியோஸ் ஒரு உலகளாவிய தயாரிப்பு நிறுவனமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார், அவை அனைத்துமே  வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. மதிப்புமிக்க ஆந்திரா அரசின் நந்தி விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். 

Related News

9213

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery