Latest News :

’அவதார் 2’ படத்தை மிஞ்சும் விதத்தில் உருவாகும் ‘நான் கடைசிவரை தமிழன்’!
Monday September-04 2023

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கதையாசிரியர் என சினிமாவில் உள்ள அத்தனை பிரிவுகளிலும் பணியாற்றக்கூடிய ஒரே நபர் டி.ராஜேந்தர் மட்டுமே. அவர் இசையமைப்பில் வெளியான பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. தான் இயக்கிய படங்கள் மட்டும் இன்றி, மற்ற இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்து மிகப்பெரிய வெற்றி பாடல்களை கொடுத்த டி.ராஜேந்தர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராக களம் இறங்கியுள்ளார்.

 

எம்.ஏ.ராஜேந்திரன் தயாரித்து இயக்கும் திரைப்படம் ‘நான் கடைசிவரை தமிழன்’. இப்படத்திற்கு டி.ராஜேந்தர் பாடல்கள் எழுதி இசையமைக்க உள்ளார். இப்படத்தின் துவக்க விழா நேற்று காலை சென்னை பிர்சாத் லேபில் பூஜையுடன் தொடங்கியது. இதில் டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தார். மேலும், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, நிர்மல், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்பு செல்வன், நடிகரும் தயாரிப்பாளருமான நடராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குநருமான எம்.ஏ.ராஜேந்திரன் பேசுகையில், “நான் கடைசி தமிழன் பட தொடக்க விழாவிற்கு வந்து கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்கிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர். அனைவரும் நமது சகோதர சகோதரிகளே. நாம் இந்துவாக முஸ்லீமாக கிறிஸ்தவராக இருக்கலாம் ஆனால் முதலில் நாம் மனிதனாக இருப்போம். தமிழன் என்றாலே அது வரலாறு, என் தமிழுக்கு பல பெயர்கள் உண்டு அருந்தமிழ், செந்தமிழ், தீந்தமிழ்..  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இவ்விழாவுக்கு வந்திருக்கும் பன்முக கலைஞர் டி.ராஜேந்தர், சிறுபட முதலீட்டு தயாரிப்பாளர்  அன்புச் செல்வன்,  இமான் அண்ணாச்சி,நிர்மல்,  ராஜா, ஜெய்பாபு, நடராஜன்  உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறேன். நன்றி ‘கடைசிவரை தமிழன்’ படத்தின் கதை மிகவும் மாறுபட்ட வித்ததில் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை ஒரு விஞ்ஞானி, மகன் ஒரு ராணுவ வீரன். இருவருமே நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள். எதற்காக,ஏன்  என்பதுதான் கதை.

 

தமிழன் என்றால் சரித்திரம் படைப்பவன். ஆங்கிலத்தில் அவதார் 2ம் பாகம் படம் 160 மொழியில் எடுக்கப்பட்டது.  அதை மிஞ்சும் வகையில் 163 மொழியில் நான் கடைசி வரை தமிழன் படம் உருவாகிறது. எந்த மதமாக இருங்கள் நாம் முதலில் மனிதனாக இருப்போம்  அவதாா் படம் சாத்தியம் என்றால்  நான் கடைசிவரை தமிழன் படமும்  சாத்தியமாக்குவேன்  தமிழன் என்றால் என்றென்றும் உலக  வரலாறு தான்.”

 

நடிகர் கராத்தே ராஜா பேசுகையில், “இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. சிறுபிள்ளையாக இருந்தபோது டி.ராஜேந்தர் பாடல்கள் என்றால் தாளம்போட்டு பாடிக்கொண்டே இருப் பேன்.அவரது பாடல்கள் எனக்கு பிடிக்கும் . நான் கடைசி வரை தமிழன் என்று படத்தின் பெயரை கேட்டாலே மனதில் பதியும் அளவுக்கு அருமையான டைட்டிலை வைத்திருக்கும் இயக்குனர் எம்.ஏ.ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.  இப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

நடிகர் இமான் அண்ணாச்சி பேசுகையில், “நான் கடைசி வரை தமிழன் 163 மொழிகளில் இப்படம் உருவாகிறது  இப்படத் தொடக்க விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் மிகச் சிறப்பு என்னவென்றால் தமிழ் திரையுலகையே ஆட்டிப்படைத்த ஒரு ஜாம்பவான்  டி.ஆர் இங்கு வந்திருப்பதுதான். கொஞ்ச நாளாவே  சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு கொடுக்கலாம் என்ற பேச்சு நடக்கிறது. என்னைக் கேட்டால் அந்த பட்டத்தை டி.ராஜேந்தருக்கு தரலாம்.  (இப்படி சொன்னவுடன் டி.ராஜேந்தர் எழுந்து அதெல்லாம் வேண்டாம் என்றார்.” என்றார்.

 

ஆர்.கே.அன்புசெல்வன் பேசுகையில், “நான் கடைசி வரை தமிழன் என்ற டைட்டிலை கேட்கும்போதே வீரம் வெறி பிறக்கிறது. இப்படத்துக்கு பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசை அமைக்கிறார். பட டைட்டிலை கேட்டவுடனே அவர் இசை அமைக்க ஒப்புக்கொண்டார் பண்ணாரி அம்மன் என்ற படத்திற்கு இசை அமைத்தவர் 30 வருடத்துக்கு பிறகு மீண்டும் வெளிப்படத்துக்கு அவர் இசை அமைப்பது மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.

 

படத்திற்கு பாடல் எழுதி இசையமைக்கும் டி.ராஜேந்தர் பேசுகையில், “இந்த படத்துக்கு நான் கடைசி வரை தமிழன் என்று பெயர் வைத்திருப்பதாக இயக்குநர் எம் ஏ.ராஜேந்திரன் கூறினார். ராஜேந்திரன் என்று சொன்னாலே திறன் அந்த திறன் இந்த ராஜேந்திரன் இடத்தில் இருக்கிறது. பண்ணாரி அம்மன் படத்துக்கு பிறகு நான் இசை அமைப்பதை நிறுத்தி விட்டேன். இந்த பட டைட்டிலில் தமிழன் என்ற ஒரு வார்த்தைதான் இப்படத்துக்கு நான் இசை அமைக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம். நான் முருகனை அழைத்தால் சத்தத்தோடு கூப்பிடுவேன். முருகன் என்றால் தமிழ் ,  நான் கடை.சி வரை தமிழன் படத்தில் தமிழ் இருக்கிறது. இயக்குனர் ராஜேந்திரனிடம்  எனக்கு பிடித்தது பிடிவாதம் நானும் பிடிவாதக்காரன். இயக்குனர் இராஜேந்திரனிடம் ஏன் கடைசி வரை தமிழன்னு சொல்றிங்க,  உயிர் உள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, உணர்வுள்ளவரை  தமிழன்னு, சொல்லுங்க,  மூச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க , பேச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க  என்றேன். இல்லை சார். கடைசி வரை தமிழன் தான் எனக்கு பிடித்திருக்கிறது  என்றார்.  அவர் சொன்ன தலைப்பு எனக்கு தந்தது மலைப்பு  தமிழன் என்றால் இனிப்பு. அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் படத்துக்கு தமிழில் டைட்டில் வைத்திருக்கிறார். அதனால் இசை அமைக்க ஒப்புக்கொண்டேன்.” என்றார்.

 

தற்போது இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் படத்தின் மற்ற விபரங்கள் மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர்.

Related News

9216

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery