விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார், கெளரி கிஷன் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ’அடியே’ திரைப்படத்தை தயாரித்த மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த பிரபா பிரேம்குமார் தயாரிப்பு அடுத்து உருவாகும் படம் ‘போட் - நெய்தல் கதை’.
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கும் இப்படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.
முழுக்க முழுக்க கடலில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெறும் கானா பாடல் ஒன்றை பிரபல கர்நாடக இசைப்பாடகி பத்மபூஷன் சுதா ரகுநாதன் பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் நாயகனை நோக்கி நாயகி ஒரு கானா பாடல் பாடுவது போன்ற சூழல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான பாடலை உருவாக்கிய பிறகு, இந்த பாடலை சுதா ரகுநாதன் பாடினால் நன்றாக இருக்கும் என்று இசையமைப்பாளரும், இயக்குநரும் விரும்பியுள்ளனர்.
அதன்படி, அவர்கள் பாடகி சுதா ரகுநாதனை அனுகி தங்களுடைய விருப்பத்தை தெரிவித்த போது, “எனக்காக ஒரு கானா பாடலை யோசித்தது ஆரோக்கியமான பரிசோதனை முயற்சி, இசை என்பது ஒலி வடிவமே, நிச்சயம் நான் பாடுகிறேன். ஆனால், தற்போது லண்டனில் இருப்பதால், வருவதற்கு மூன்று மாதங்கள் ஆகும்” என்று சொல்லியிருக்கிறார்.
படக்குழுவும் அவருக்காக மூன்று மாதங்கள் காத்திருந்து, சுதா ரகுநாதன் சென்னை திரும்பியதும் பாடல் பதிவை நடத்தியுள்ளனர். வட சென்னையைச் சேர்ந்த கோல்ட் தேவராஜ் என்ற பாடலாசிரியர் எழுதிய கானா பாடலை பாடி முடித்த சுதா ரகுநாதன், பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் ‘போட் - நெய்தல் கதை’ திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...