’தீயவர் குலைகள் நடுங்க’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
Tuesday September-05 2023

அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஓ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்ய, நவநீதன் சுந்தர்ராஜன் வசனம் எழுதியிருக்கிறார். அருண்சங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

 

விசாரணை ஆக்‌ஷன் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

 

Theeyavar Kulaigal Nadunga

 

தற்போது படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பாடல், டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

Related News

9220

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery