சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பா.ஜ.க அரசு பல்வேறு வில்லத்தனங்களை செய்து வரும் நிலையில், திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அவருக்கு ஆதரவு குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி அமைச்சரும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்த பாடலை பாடகர் செந்தில்தாஸ் பாடியுள்ளார்.
#WeSupportUdhayanithi என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த பாடல் வரிகள் இதோ,
உதயநிதி தமிழர் இதயநதி
உதயநிதி
அன்பின் புதியவிதி
உதயநிதி
காக்கும்
மக்கள் பணி
உதயநிதி உழைப்பில் உயர்ந்தக் கொடி
பணிவிற்கு
பணிபவன்
துணிவிற்கு
துணையவன்
கொள்கை
எதிரிக்கு பகை அவன்
இதுதான்
எங்கள் உதயநிதி
ஏணிப்படி பிறர்க்கு
ஏணிப்படி எவர்க்கும்
ஏணிப்படி தந்தே
உலகம் வியக்க
உதவிடும் அன்பு ஒளி
சரணம் 1
உதயநிதி
பிறரை வாழவைக்கும்
தொண்டர் அணி
பெரியோரை மதிக்கும்
அருமைத்
தம்பி
இளையோர்கள்
வலியறிந்து
துணையாகும்
கழகக் கண்மணி
உதயநிதி
மக்கள் அன்பன்
இனி
உதயநிதி
கழகம் வகுத்த கொள்கை கனி
( பல்லவி)
உதயநிதி தமிழர் இதயநதி
உதயநிதி
அன்பின் புதியவிதி
உதயநிதி காக்கும் மக்கள் பணி
உதயநிதி உழைப்பில் உயர்ந்த கொடி
சரணம் 1
உதயநிதி
பிறரை வாழவைக்கும்
தொண்டர் அணி
பெரியோரை மதிக்கும் அருமைத் தம்பி
இளையோர்கள்
வலியறிந்து
திசையாகும்
கழகக் கண்மணி
உதய நிதி
மக்கள் அன்பன் இனி
(மீண்டும் துண்டு
பல்லவி)
சரணம் 2
அன்பை
வாரித்தரும் எங்கள்
எளிய மதி
உதயநிதி
தொடரட்டும் உங்கள்
மக்கள் பணி
உதயநிதி
கழகம் தந்த
உதய நீதி
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...