Latest News :

’ஜவான்’ படம் பற்றி ஷாருக்கான் - விஜய் சேதுபதியின் சுவாரஸ்ய கேள்வி-பதில்கள்!
Wednesday September-06 2023

இயக்குநட் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ நாளை (செப்.7) உலகம் முழுவதும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்தின் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதால் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும், ’ஜவான்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லீ, இந்திய அளவின் முன்னணி இயக்குநராக உருவெடுப்பதோடு, அவர் இயக்கும் படங்கள் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டும் திரைப்படமாகவும் இருக்கும், என்றும் திரையுலகினர் பேசி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பார்வையாளர்களின் அதிகரித்து வரும் உற்சாகத்தை மேலும் உயர்த்துவதற்கு தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்கள் வழியாக 'ஜவான் -செப்டம்பர் 7- 7 கேள்வி பதில்கள்' என்ற தலைப்பில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனர். இது படத்தைப் பற்றிய வேடிக்கையான நுண்ணறிவை அளிக்கும் வகையில் உள்ளது.

 

இதில், அட்லீயும் நீங்களும் நீண்ட நாட்களாக பணியாற்ற விரும்புவது உண்மையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷாருக்கான், “பிகில் படத்தின் தயாரிப்பின் போது நான் அட்லீயை சந்தித்தேன். அவர் சிஎஸ்கே மற்றும் கே கே ஆர் போட்டிகளுக்கு சென்றிருந்தார். இதற்கு முன் அட்லீ என்னிடம் ஜவான் பற்றிய மூலக்கதையை சொன்னார். அத்துடன், ஐந்து பெண்களுடன் நீங்கள் நடிக்கிறீர்கள். இது எனது படம். என் மனைவி பிரியாவும், நானும் நிறைய பெண்கள் கூட்டத்தில் இருக்கும் போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் என்று உணர்கிறோம். உங்களுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும், என்றார். அப்படித்தான் ஜவான் தொடங்கியது.” என்றார்.

 

நீங்கள் வில்லனா? அல்லது ஹீரோவா? அல்லது வில்லனிக் ஹீரோவா? என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஷாரும், “இது ஒரு சாதாரண மனிதர்- எல்லோருடைய பொது நலனுக்காக அசாதாரமான விசயங்களை செய்கிறார்” என்றார்.

 

நீங்கள் ஒரு அதிரடி நாயகனா? அல்லது ஆயுள் காப்பீட்டுடன் உள்ள சாதாரண நபரா? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், ”என் இன்சூரன்ஸ் பாலிசி முடிந்து விட்டது. பலமுறை காயம் அடைவதால் எனக்கு யாரும் காப்பீடு செய்ய விரும்பவில்லை. மேலும் ஆக்‌ஷன் படங்களை செய்வதை விரும்புவதற்கு ஒரே காரணம், என்னுடைய இளைய மகன் ஆப்ராம். அவர் ஆக்சன் -அனிம் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் கொண்ட படங்களை பார்க்க விரும்புவதால், அவருக்காக ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்” என்றார்.

 

இறுதியாக, ஜவானில் நடிக்க ஒப்புக்கொண்ட தருணம் பற்றி கேட்டதற்கு, “நான் மொட்டை ஹீரோவாக அறிமுகப்படுத்தப்படும் ஒரு காட்சி இருக்கிறது. அப்போது இயக்குநர் அட்லீ என் கையில் நிறைய பவுடரைக் கொட்டியது எனக்கு நினைவிருக்கிறது. நான் அந்த காட்சியிலும் நடித்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் நான் இறுதியாக அந்த காட்சியை பார்த்த போது மறக்க முடியாததாக இருந்தது. ஜவான் படத்திற்கான எனது தருணம் அதுதான்” என்றார். 

 

ஷாருக்கானை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியிடம், ஜவான் படத்தில் உங்களுக்கு வில்லன் வேடம் எப்படி கிடைத்தது? படத்தில் நீங்கள் உண்மையான வில்லனா? அல்லது ஷாருக்கானா? என்று கேட்டதற்கு, “ஷாருக்கிடம், 'சார் நான் உங்கள் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன்' என்றேன். அதற்கு ஷாருக், 'கடந்த சில வருடங்களாக உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தோம்' என்றார். அதனால் தான் இந்த படத்தில் இருவரும் இணைந்தோம். உண்மையான வில்லன் யார்? என்றால், இருவரும் அவரவர் வேடங்களில் நடிக்கிறோம். ஒருவருக்கொருவர் வில்லன்கள்” என்று பதில் அளித்தார்.

 

ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி விஜய் சேதுபதியிடம் கேட்டதற்கு, “ஷாருக் கான் நேர்காணலின் போது எப்படி புத்திசாலித்தனமாக கேள்விகளை எதிர்கொண்டு பதிலளிக்கிறார் என்பதை பார்த்து வியந்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி அறிந்து கொள்ள.. அவரிடம் கேட்க பல கேள்விகள் உள்ளது” என்றார்.

 

இவ்வளவு அழுத்தமான வில்லன் வேடத்திற்கு நீங்கள் எப்படி தயாரானீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, ”திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் நான் வல்லவன் என்பது எனக்குத் தெரியும். வேறு எதையும் என் தலைக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை. நான் செய்ய விரும்பாத வேடத்தை செய்தால் அது என் மனதை கெடுத்து விடும் என்று நம்புகிறேன்” என்றார்.

 

ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதியின் இந்த கேள்வி - பதில் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்தில் இதை விட நிறைய இருக்கிறது, என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

Related News

9222

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery