Latest News :

நடிகை அனுஷ்காவுக்காக நடிகர் பிரபாஸ் விடுத்த சவால்!
Wednesday September-06 2023

பிரபாஸ் - அனுஷ்கா இருவர் பற்றியும் அவ்வபோது திருமணம் வதந்தி வெளியாவதும், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிப்பதும் அடிக்கடி நிகழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது நடிகை அனுஷ்காவுக்காக நடிகர் பிரபாஸ் சவால் ஒன்றை விடுத்துள்ளார். 

 

னுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான முயற்சியாக சமையல் குறிப்பு சவால் ஒன்றை அப்படத்தின் நாயகியான அனுஷ்கா முன்னெடுத்திருக்கிறார்.

 

இது தொடர்பாக அவர் தனக்கு பிடித்த உணவினையும், அதற்கான செய்முறை குறிப்பையும் பகிர்ந்து கொண்டு, இந்த சவாலை அனைவரும் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த தனித்துவமான முயற்சியை உணவின் மீதும், விருந்தோம்பல் மீதும், பேரன்பு கொண்ட பிரபாஸுடன் இந்த சவாலை தொடங்க விரும்புகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார். 

 

இதைத்தொடர்ந்து நட்சத்திர நடிகரான பிரபாஸ் தனக்கு விருப்பமான ரொய்யாலா புலாவ் ( இறால் புலாவ்) எனும் உணவை தயாரிக்கும் செய்முறையை விரிவாகவும், ரசனையுடனும் விவரித்து அதனை சமூக ஊடகங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்த ’சமையல் குறிப்பு’ சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மற்றொரு முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரணை டேக் செய்து, அவரிடமும் கேட்டுக் கொண்டார். மேலும் தனது ரசிகர்களிடத்திலும் தங்களுக்குப் பிடித்த உணவையும், அதன் செய்முறையும் புகைப்படத்துடன் அல்லது காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்கா முன்னெடுத்திருக்கும் சமையல் குறிப்பு  சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மேலும் நடிகர் பிரபாஸ் செப்டம்பர் 7ஆம் தேதியன்று அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Related News

9223

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery