Latest News :

பவன் கல்யாணில் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு தொடங்கியது
Saturday September-09 2023

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவிசங்கர் ஆகியோர் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகன் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும் வெளிப்படுத்தும் ஒரு அதிரடியான போஸ்டரை இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக  பகிர்ந்துள்ளார்.

 

பவன் கல்யாண் இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில், படத்தின் மிகப்பெரிய ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பு, விழாவுடன் இனிதே துவங்கியது. இந்த விழாவில், தயாரிப்பாளர்கள் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டரில் பவன் கல்யாண் அவருக்கே உரித்தான  ஸ்டைலுடன் கலக்கலாக காக்கி உடையில் மிளிர்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆனந்த் சாய் மற்றும் குழுவினர்  இந்த ஷெட்யூலுக்காக பிரமாண்டமான செட்டை அமைத்துள்ளனர்.

 

வெகுஜனங்களின் ரசனைக்கேற்ற  பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்து வரும் ஹரிஷ் ஷங்கர், மீண்டும் மக்களை பெரிதும் மகிழ்விக்கும் ஒரு பிரமாண்ட புராஜக்டை இயக்கவுள்ளார்.  இப்படத்தில் இதுவரை  பார்த்திராத மாஸ் அவதாரத்தில் அதிரடி போலீஸ் அதிகாரி அவதாரத்தில் பவன் கல்யாணை காட்சிப்படுத்தவுள்ளார்.

 

முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார். தொழில்நுட்பக் குழுவினரைப் பொறுத்தவரை, அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்கிறார், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். எடிட்டிங் சோட்டா கே.பிரசாத் செய்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் டைரக்டர்களான ராம்-லக்ஷ்மண் மேற்பார்வையிடுகிறார்கள்.

Related News

9226

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery