விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Wednesday September-13 2023

பாக்ஸ் ஆஃபிசில் வசூல் நாயகனாக உருவெடுத்துள்ள விஜய் ஆண்டனி, படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி திரையுலகினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் ‘ரத்தம்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருந்த ‘ரத்தம்’ அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

’தமிழ் படம்’படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக ‘ரத்தம்’ உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு, கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்ய, செந்தில் ராகவன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். திலீப் சுப்பராயண் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘ரத்தம்’ படத்தின் டிரைலர் வெளியான சில நாட்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியுபில் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

9233

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery