லெமன் லீப் கிரியேசன்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் ’புளூ ஸ்டார்’ படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, அருண் பாலாஜி, மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநர் ஜெய்குமார் இயக்கும் இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை இயக்குநர் ஜெய்குமார் மற்றும் தமிழ்பிரபா இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். செல்வா படத்தொகுப்பு செய்ய, ரகு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தில் நடித்திருந்த அசோக் செல்வனும் , கீர்த்தி பாண்டியனும் நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்காக அவர்கள் நடிப்பில் உருவான ‘ரயிலின் ஒலிகள்’ என்கிற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.
பிரதீப் குமார், சக்தி ஸ்ரீகோபாலன் பாடியிருக்கும் இந்த பாடல் வரிகளை கவிஞர் உமாதேவி எழுதியிருக்கிறார். ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சவுந்தர்யா, பா.இரஞ்சித் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...