Latest News :

சிங்கப்பூர் தொழிலதிபருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கும் நடிகை நயன்தாரா!
Saturday September-16 2023

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். திருமணமாகி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கும் நயன்தாராவின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபருடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை அவர் தொடங்க இருக்கிறார்.

 

சரும பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் தொழிலதிபர் டெய்சி மோர்கன், நயன்தாராவின் நட்சத்திர ஈர்ப்பு மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் படைப்பாற்றல், என இந்த மூவரும் கூட்டணி அமைத்து, தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும், சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை உயர் தரத்துடன் வழங்குவதன் மூலம் தொழில் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். 

 

ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் நுழைவதன் மூலம், அவர்களுடைய பிராண்டான '9 ஸ்கின்'- இயற்கையான அழகை மேம்படுத்தும் புதுமையான தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை வழங்க விருக்கிறார்கள். 

 

கோலாலம்பூரில் '9 ஸ்கின்' எனும் வணிக முத்திரையுடன் கூடிய சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்கள் கோலாகலமாக அறிமுகமாகிறது. டெய்சி மோர்கன்- நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒன்றிணைந்து தங்களுடைய தனித்துவமான தோல் பராமரிப்பு பொருட்களை ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்துவதில் உற்சாகமாக உள்ளனர்‌. 

 

மேலும் உலகில் உள்ள தனி நபர்களின் தோல் பராமரிப்பு அனுபவங்களை மேம்படுத்துவதற்காக, இந்த மூவரின் தனித்துவமான நிபுணத்துவத்தையும், பிரத்யேக அம்சத்தையும், அவர்களுடைய பொருட்கள் மூலம் கொண்டு வருகிறார்கள். 

 

தோல் பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்பு துறையில் முன்னணியில் உள்ள '9 ஸ்கின்' எனும் வணிக முத்திரையின் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், செப்டம்பர் 29ஆம் தேதியன்று மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இதன் அறிமுகம் நடைபெறுகிறது.

Related News

9241

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery