Latest News :

’பிரம்மயுகம்’ படத்தில் நடிகர் மம்முட்டிக்கான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு!
Sunday September-17 2023

திகில் மற்றும் திரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சக்ரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ். சஷிகாந்த்  இணைந்து தயாரிக்கும் படம் ‘பிரம்மயுகம்’. இதில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி முதன்மை வேடத்தில் நடிக்க, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷெஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். ஷபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்ய, ஜோதிஷ் சங்கர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். டிடி.ராமகிருஷ்ணன் வசனம் எழுத, ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனை கலைஞராகவும், மெல்லி.ஜே ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

 

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி கொச்சி மற்றும் ஒட்டப்பாலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக தொடங்கிய நிலையில், தற்போது நடிகர் மம்முட்டிக்கான காட்சிகள் அனைத்தையும் படக்குழு வெற்றிகரமாக முடித்திருக்கிறது. மேலும், மீதமுள்ள காட்சிகளை அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் என மற்ற நடிகர்களை வைத்து விறுவிறுப்பாக படமாக்கி வருகிறது.

 

படத்தின் முழு படப்பிடிப்பையும் வரும் அக்டோபர் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழு ‘பிரம்மயுகம்’ படத்தை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

Related News

9244

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!
Wednesday July-09 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...

’பல்டி’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர்!
Wednesday July-09 2025

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி  அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...

Recent Gallery