அறிமுக இயக்குநர் ராகேஷ்.என்.எஸ் இயக்கத்தில், சிம்ஹா நடிக்கும் படம் ‘தடை உடை’. கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி ரேஷ்மி மேனன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீ இசையமைக்க, ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். பொன் கதிரேஷ்.பி.கே படத்தொகுப்பு செய்ய, கூடுதல் திரைக்கதை சாய்ராம் விஷ்வா அமைத்துள்ளார். எம்.தேவேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘தடை உடை’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குடும்பத்துடன் அனைவரும் ரசித்துக் கொண்டாடும் வகையிலான கலகலப்பான கலர்புல்லான ஒரு திரைப்படம் என்பதை இந்த முதல் பார்வை போஸ்டர் உறுதி செய்துள்ளது.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...