தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிறகு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வெற்றி பெற்ற விஜய் ஆண்டனியின் மகள் சாரா தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் சாரா, 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர்.
தற்கொலை செய்துகொண்ட சாரா, கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றது. இந்த சம்பாம், சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி மிகப்பெரிய விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி, தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...