அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘பூங்கா நகரம்’. இதில் தமன் குமார் நாயகனாக நடிக்க, ஸ்வேதா டோரத்தி நாயகியாக நடிக்கிறார். இவகளுடன் பிளாக் பாண்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹமரா சி.வி இசையமைக்கிறார். நா.ராஜா பாடல்கள் எழுத, சி.எம்.இளங்கோவன் படத்தொகுப்பு செய்கிறார். ராபர் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமான ‘பூங்கா நகரம்’ திருவண்ணாமலையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது.
இந்த நிலையில், ‘பூங்கா நகரம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த போஸ்டரை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...