ரூ.1000 கோடியை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’! - அட்லீயை கொண்டாட தயாராகும் பாலிவுட்
Wednesday September-20 2023

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த அட்லீ, இனி பாலிவுட்டிலும் முன்னணி இயக்குநராக வலம் வரப்போகிறார் என்பதை ‘ஜவான்’ படத்தின் வசூல் உறுதி செய்துள்ளது. ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது வசூலில் பல சாதனைகள் படைத்து வருகிறது.

 

அந்த வகையில், இந்தியாவில் ரூ.500 கோடி கிளப்பில் இணைந்து புதிய சாதனைப் படைத்த ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1000 கோடி வசூலை நோக்கி பயணிக்கிறது. படம் வெளியாகி 13 நாட்களில் தென்னிந்திய மாநிலங்களில் புதிய வசூல் சாதனை படைத்திருக்கும் இப்படம் தற்போது ரூ.907 கோடி வசூலித்திருக்கிறது.

 

'ஜவான்' வெற்றியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்த திரைப்படம் தென்னிந்திய திரையுலக சந்தையிலும் சிறப்பான வரவேற்பை பெற்றதாகும். இந்தத் திரைப்படம்150 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை புத்தகத்தில் புதிய பக்கங்களை எழுதி, தென்னிந்திய திரையுலக சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

 

இந்தத் திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் வெற்றியானது இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும், உலகெங்கிலும் உள்ள சாதனைகளை முறியடிக்கும் பாதையையும் உருவாக்கியுள்ளது. உலக பாக்ஸ் ஆபீசில் 907 கோடியே 54 லட்சம் ரூபாயை வசூலித்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படம் விரைவில் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்து, ஆயிரம் கோடி ரூபாய் கிளப்பில் இணையவுள்ளது. 

 

'ஜவான்' தனது வெற்றிப் பயணத்தை தொடர்வதால், பாக்ஸ் ஆபிஸில் அழிக்க இயலாத அடையாளத்தை பதிவு செய்து வருகிறது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியும், புகழும் அனைத்து மொழிகளிலும் ஷாருக்கானின் 'பதான்' திரைப்படத்தின் வசூலைக் கடந்து விடும் என பலரையும் நம்ப வைத்துள்ளது.

 

Jawan

 

மேலும், இப்படத்தின் மூலம் கோலிவுட் கொண்டாடி வந்த இயக்குநர் அட்லீயை பாலிவுட் சினிமாவும் கொண்டாட தயாராகி வருகிறது. இன்னும் சில நாட்களில் பதான் திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை தொட உள்ள நிலையில், பாலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் அட்லீயை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறார்கள்.

Related News

9255

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery