நாக சைதன்யாவின் 23 வது படத்தில் இணைந்த சாய் பல்லவி!
Wednesday September-20 2023

இயக்குநர் சந்து மொண்டேட் இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, பன்னி வாசு தயாரிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘என்.சி 23’ என்று அழைக்கின்றனர். தற்போது இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இயக்குநர் சந்து மொண்டேடி - நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இதன் முன் தயாரிப்பு பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

 

தெலுங்கு மற்றும் இந்தியில் பல வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ், பன்னி வாசு தயாரிக்கும் இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் மிக உயர்ந்த தரத்துடன் உருவாக இருக்கிறது.

 

இந்த நிலையில், இப்படத்தில் தற்போது சாய் பல்லவி இணைந்திருப்பதை படக்குழு இன்று புகைப்படத்துடன் வெளியிட்டதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இதற்கு முன்பு சூ’ப்பர் ஹிட் லவ் ஸ்டோரி’ படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related News

9256

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery