தென்னிந்திய திரைப்பட & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் யூனியன், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த யூனியனின் உறுப்பினராக இருப்பவர்கள் தென்னிந்திய மொழித்திரைப்படங்களில் மட்டும் இன்றி பாலிவுட் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழித் திரைப்படங்களிலும், வெளிநாட்டு திரைப்படங்களிலும் ஸ்டண்ட் இயக்குநர்களாகவும், ஸ்டண்ட் நடிகர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
தென்னிந்திய திரைப்பட & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் யூனியனில் உறுப்பினர்களாக, ஏற்கனவே யூனியனில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பளித்து வந்த நிலையில், தற்போது உறுப்பினர்களின் இரத்தம் சொந்தம் அல்லாத வெளி நபர்களுக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு இனி 10 வருடங்களுக்கு ஒரு முறை மற்றவர்களுக்கு கொடுக்கவும் யூனியன் முடிவு செய்துள்ளது.
அதன்படி, நன்கு ஸ்டண்ட் கலை பயிற்சி தெரிந்த வெளி நபர்கள் தென்னிந்திய திரைப்பட & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் யூனியனில் சேருவதற்கான தேர்வு வரும் அக்டோபர் மாதம் முதல் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பம் நாளை (செப்.21) முதல் சென்னை, வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் யூனியன் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினர்களா சேருவதற்கான அடிப்படை தகுதிகள்:
1. 5.5 அடி உயரம்
2. குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
4. நீச்சல், ஜிம்னாஸ்டிக், சிலம்பம், வால் பயிற்சி ஆகியவற்ற்றில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தனித்திறமைகள் கொண்டவராக இருக்க வேண்டும்.
இந்த நான்கு அடிப்படை தகுதிகள் இருந்தார் இவர்கள் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினர்களாக சேருவதற்காக விண்ணப்பிக்கலாம். அதே சமயம், இந்த தகுதிகளுடன், குற்ற பின்னணி எதுவும் இல்லாமல் இருப்பதோடு, சம்மந்தப்பட்ட நபர் வசிக்கும் உள்ளூர் காவல் நிலையத்தில், நற்சான்றிதழும் பெற்று வர வேண்டும்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...