வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகும் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் இசை பயணம் முதல் பாடல் வெளியீட்டுடன் சமீபத்தில் தொடங்கிய நிலையில், அப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதையத்து இரண்டாவது பாடல் வெளியீட்டுக்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டவுன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில், ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தில் நாயகன் ரவி தேஜாவின் அதிரடி அவதாரத்தை வெளிப்படுத்தும் விதமாக செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியான இரண்டாவது பாடல் “வீடு...” வெளியான சில நாட்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருப்பதோடு, சமூக வலைதளங்களில் டிரெண்டாகியும் வருகிறது.
‘தி காஷ்மீர் பைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ படங்களைத் தொடர்ந்து அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் கீழ் அபிஷேக் அகர்வால் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நுபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் நடிக்கிறார்கள். இவர்களுடன் அனுபம் கேர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
தேஜ் நாராயண் அகர்வால் ’டைகர் நாகேஸ்வர ராவ்’ திரைப்படம் தசரா பண்டிகை வெளியீடாக வரும் அக்டோபர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...