Latest News :

3 வாரத்தில் ‘பதான்’ படத்தின் வசூலை மிஞ்சும் ‘ஜவான்’!
Saturday September-23 2023

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான ‘ஜவான்’ திரைப்படம் வசூலில் பல சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. ரூ.1000 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் ‘ஜவான்’ தற்போது ஷாருக்கானின் முந்தைய மிகப்பெரிய வெற்றிப் படமான பதானின் வசூலையும் முறியடிக்க உள்ளது.

 

இந்திய திரையுலகில் இதுவரையிலும் அதிக வசூல் செய்த முதல் மூன்று படங்களில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸில் அதிரடியான வசூலைக் குவித்து வருகிறது ஜவான், படம் வெளியாகி மூன்றாவது வாரத்தைக் கடந்த நிலையிலும் வசூல் குறைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. 

 

'ஜவான்' திரைப்படம் மொத்தமாக  அனைவரும் வியக்கும் வகையில் 528.39 கோடிகளை வசூலித்துள்ளது, ஹிந்தியில் மட்டும் இப்படம் 473.44 கோடிகளை குவித்துள்ளது, படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் (WW GBOC) 937.61 கோடிகளை எட்டியுள்ளது!

 

'ஜவான்' அகில இந்திய சாதனைகளை மட்டும் முறியடிக்கவில்லை; இது உலக அளவில் கூட ஒவ்வொரு நாளும் புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்து வருகிறது.  அமைத்து வருகிறது.

 

இத்திரைப்படம் ஏற்கனவே 'கதர்' திரைப்படத்தின் வாழ்நாள் வருவாயைக் கடந்துவிட்டது, இந்திய திரையுலகில் பதானின் மொத்த வசூலை இந்த வார இறுதியில் முறியடிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஹிந்தி வசூல் ஞாயிற்றுக்கிழமைக்குள் 500 கோடியை எட்ட உள்ளது, இந்த மைல்கல்லை இந்தியாவில் மிக வேகமாக எட்டிய முதல்  படம் இதுவாகும். 

 

கவர்ச்சியான கதைக்களம் மற்றும் நட்சத்திர நடிகர்களுடன்  பார்வையாளர்களைக் கவர்ந்த இப்படம், பல புதிய சாதனைகள் படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9260

‘சேத்துமான்’ இயக்குநர் தமிழின் புதிய படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கியது!
Sunday December-03 2023

பிரபலமான நாவல்கள் திரைப்படங்களாக உருப்பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது...

மீண்டும் ஒரு சாம்ராஜ்ய போட்டி! - ’சலார்’ பட டிரைலர் சொல்வது இது தானா?
Saturday December-02 2023

‘கே.ஜி.எப்’ புகழ் ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் மற்றொரு பிரமாண்ட திரைப்படம் ‘சலார்’...