அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும், ஒரே ஆண்டில் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இரண்டு திரைப்படங்கள் தலா ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்திருப்பதோடு, இத்தகைய சாதனைப் படைத்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் ஷாருக்கான் பெற்றுள்ளார்.
இப்படத்தின் கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பு மூலம் பார்வையாளர்களை வசீகரித்துள்ளது. சாதனை புத்தகத்தில் புதிய அத்தியாயத்தை இந்த திரைப்படம் எழுதி இருக்கிறது. ஜவான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், இப்படத்தின் வசூல் புதிய சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்திற்கு நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து அபிரிமிதமான வரவேற்பு கிடைத்து வருவதால் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தத் திரைப்படம் மாபெரும் சினிமா ஆற்றலாக கணக்கிடப்பட வேண்டும்.
மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் செய்து வருவதால், இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள ஷாருக்கான் ரசிகர்களுக்கு ’ஜவான்’ திரைப்படத்தை ஒரு சினிமா திருவிழாவை போல் கொண்டாடி வருகிறார்கள்.

ஷாருக்கானின் ‘ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் வழங்க, கெளரி கான் தயாரித்துள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக கெளரவ் வர்மா பணியாற்றியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான ‘ஜவான்’ திரைப்படம் தற்போதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...