சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ‘ஷாட் பூட் த்ரீ’ நட்சத்திரங்கள்!
Monday September-25 2023

‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘பெருச்சாழி’, ‘நிபுணன்’ ஆகிய படங்களை இயக்கிய அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஷாட் பூட் த்ரீ’. சிறுவர்களை மையப்படுத்திய இப்படத்தில் சிறுவர்கள் பூவையார், வேதாந்த் மற்றும் சிறுமி பிரனிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ஆனந்த் ராகவ் உடன் இணைந்து அருணாச்சலம் வைத்யநாதன் திரைக்கதை எழுதியிருக்கும் இப்படத்திற்கு சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிபதிவு செய்துள்ளார். வீணை செல்வன் ராஜேஷ் வைத்தியா இசையமைத்துள்ளார்.  பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார்.  முகில் சந்திரன் இணைத்தயாரிப்பு செய்துள்ளார். வெங்கடேஷ் சடகோபன் நிர்வாகத்தயாரிப்பு செய்துள்ளார். அருண்ராம் கலைச்செல்வன் துணைத்தயாரிப்பு செய்துள்ளார். 

 

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குடும்பமாகப் பாக்ககூடிய  சிறந்த அனுபவத்தை தரும் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைப்பெற உள்ள மூன்றாவது வேல்ஸ் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் ‘ஷாட் பூட் த்ரீ’ படத்தில் நடித்ததற்காக பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் ஆகியோர்  சிறந்த துணை நடிகருக்கான பிரிவுக்கு  பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் ஆகிய  மூன்று பேரின் பங்களிப்பு  இத்திரைப்படத்திற்கு பெருமை சேர்த்தது மட்டும் இல்லாமல் வேல்ஸ் குழந்தைகள் திரைப்பட விழாவின் நடுவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

 

இவர்கள் மூன்று பேரும் வேல்ஸ் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில்  சிறந்த துணை நடிகருக்கானப் பிரிவில் தேர்வாகியுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமையாக உள்ளது. மூன்று பேரும் அவர்களது கதாப்பாத்திரத்தை நன்றாகப் புரிந்துக்கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். மூவரும் இந்த பரிந்துரைக்கு முழுத் தகுதியானவர்கள்  என்று ‘ஷாட் பூட் த்ரீ’ திரைப்படத்தை எழுதி, இயக்கி மற்றும் தயாரித்துள்ள அருணாச்சலம் வைத்யநாதன் கூறியுள்ளார். 

 

’ஷாட் பூட் த்ரீ’ திரைப்படம் செல்லப் பிராணிகளுக்கும், நமக்கும் இடையே இருக்கும் பிணைப்பைக் கொண்டாடுவதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களின் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. 

Related News

9266

மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் ’புரொஜெக்ட் ஹெய்ல் மேரி’
Tuesday March-24 2026

'தி மார்ஷியன்' நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' என்ற அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவல் ஒன்றை வெளியிட்டார்...

என் திரைப் பயணத்தின் சிறந்த படம் ‘பைக்கர்’! - ஷர்வானந்த்
Tuesday March-24 2026

அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில், ஷர்வானந்த், டாக்டர்...

இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் 'லவ் 3.0'!
Sunday March-22 2026

சினிமா மீதான ஆர்வத்தால் படிப்புக்கு ஏற்ற பணி மற்றும் நல்ல ஊதியத்தை கைவிட்டுவிட்டு, நடிகராக வேண்டும் என்று பலர் கோடம்பாக்கத்தில் முகாமிட்டு பல வருடங்களாக வாய்ப்பு தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்கள் பிரபலமாகும் பலர் சினிமாவுக்குள் எளிதியில் நுழைந்து விடுகிறார்கள்...

Recent Gallery