Latest News :

மனதை உருக செய்யும் ‘ஜவானின்’ தாய்மை பாடல் வீடியோ வெளியானது!
Sunday October-01 2023

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கும் ஜவான் திரைப்படம் தற்போதும் பல மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை பார்த்து பாலிவுட் சினிமா திகைத்திருப்பதோடு இயக்குநர் அட்லீயை கொண்டாடவும் செய்கிறது.

 

இந்த நிலையில், ஜவான் திரைப்படத்தின் மிகவும்  எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'ஆராராரி ராரோ' இசை வீடியோ இறுதியாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில், விவேக்கின் இதயப்பூர்வமான வரிகளில், இந்த பாடல் தாய்-மகன் பாசத்தின் அழுத்தமான சித்தரிப்புடன் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. தீப்தி சுரேஷின் அழகான குரலில் இந்த வீடியோ, தீபிகா படுகோன் மற்றும் இளம் ஆசாத் ஆகியோரின் அற்புதமான சித்தரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறது. 

 

'ஆராராரி ராரோ' வெறும் பாடல் அல்ல; இது ஒரு தாய் மற்றும் அவரது மகனுக்கு இடையே இருக்கும் ஒப்பற்ற பாசத்தின் கதை,  நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாடு. இந்த மியூசிக் வீடியோ இந்த புனிதமான உறவினை அதனுடன் வரும் தியாகங்கள் மற்றும் உணர்ச்சிகளை, ஆழமாக காட்சிப்படுத்தியுள்ளது. தீபிகா படுகோன், அர்ப்பணிப்புள்ள தாயின் பாத்திரத்தை தன் அசாத்திய நடிப்பில், திரையில் உயிர்ப்பித்துள்ளார். மியூசிக் வீடியோவில் தீபிகா படுகோன்  பார்வையாளர்களிடம் பெரும் மாற்றத்தை கொண்டு வருகிறார் அவரது தோற்றம், அவரின் பாதிப்பு அதைத்தாண்டிய அவரது மன வலிமை, அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் நம்பகத்தன்மையை சேர்க்கிறது. இந்தப்பாடல் உலகம் முழுதும் ரசிக நெஞ்சங்களை கொள்ளை கொண்டு வருகிறது. 

 

’ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். 

Related News

9273

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

Recent Gallery