Latest News :

25 நாட்களில் ரூ.600 கோடியை கடந்த முதல் இந்தி திரைப்படம்! - புதிய சாதனை படைத்த ‘ஜவான்’
Tuesday October-03 2023

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான ஒரு சில நாட்களில் வசூல் ரீதியாக பல சாதனைகளை கடந்த இப்படம் ரூ.1000 கோடி வசூலை கடந்ததோடு, தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

 

நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்ற ‘ஜவான்’ வெளியாகி 25 நாட்களில் ரூ.600 கோடி வசூலித்த முதல் இந்தி திரைப்படம் என்ற புதிய சாதனையை பாலிவுட்டில் படைத்திருக்கிறது.

 

ஜவான் இந்தியில் 547.79 கோடிகள் மற்றும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 607.21 கோடிகளை ஈட்டியுள்ளது, அதே நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில், படம் 1000 கோடிகளை வசூலித்து அனைத்து சாதனைகளையும் முறியடித்து, உலகம் முழுவதுமாக 1043.21 கோடியை வசூலித்து சாதனை செய்துள்ளது. இந்த மகத்தான சாதனைகள்  அனைத்தும் வெறும் 25 நாட்களில் முறியடிக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

 

Jawan 600

 

ஷாருக்கான் நடிப்பில் உருவான  ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த இந்திப் படமாக மாறியுள்ளது. மேலும் அவர் சாதனைகளை முறியடித்து, திரைத்துறை வசூல் வரையறைகளை மாற்றி அமைத்ததன் மூலம் மீண்டும் சரித்திரம் படைத்திருக்கிறார்.

 

புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையிலும் ‘ஜவான்’ படத்தின் வசூல் பாதிக்கப்படாமல், நான்காவது வாரத்தில் கூட ரசிகர்கள் கூட்டமாக படத்தை பார்த்து ரசிக்கிறார்கள் என்பது இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும்.

Related News

9275

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

Recent Gallery