வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்துக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி படங்கள் என்றாலே திரையுலகினர் மத்தியில் மட்டும் இன்றி ரசிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது. அதிலும் அவர் தேர்வு செய்யும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் அவரது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘ரத்தம்’ வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோக்கள் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
சி.எஸ்.அமுதனின் முந்தைய படங்களான ‘தமிழ்ப் படம்’ மற்றும் ‘தமிழ்ப் படம் 2’ ஆகியவற்றை பார்த்து சிரித்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு 'ரத்தம்' நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். முற்றிலும் வேறுபட்ட ஜானரில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தில் பயணித்து இருக்கிறார்.
படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், “சி.எஸ்.அமுதனின் திறமை குறித்து எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் என்றாலும், வெவ்வேறு ஜானர்களில் கதையை படமாக்குவதிலும் அவர் திறமையானவர். ‘ரத்தம்’ படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு உடனே பிடித்துப் போனது மற்றும் அந்தக் கதையை காட்சிப்படுத்துவதும் மிகவும் எளிதாக இருந்தது. என் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நான் நம்பினேன். மேலும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கும் போது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு கதையும் அவர்களால் தான் நகரும். தீவிரமான அர்ப்பணிப்புடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட படத்திற்கு வலு சேர்க்கும். ‘ரத்தம்’ படம் பார்த்து விட்டு பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியே வரும்போது நிச்சயம் அவர்களுக்கு 100% திருப்தியைத் தரும்” என்றார்.
இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்திருக்க, ‘ரத்தம்’ படத்தை சி.எஸ்.அமுதன் எழுதி இயக்கியுள்ளார். கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை டி.எஸ். சுரேஷ் கையாண்டுள்ளார்கள்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...