திருமண வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் காதலை உயிர்பித்த ‘இறுகப்பற்று’! - கொண்டாடும் தம்பதிகள்
Wednesday October-04 2023

தரமான மற்றும் மக்களின் வாழ்வியலை அவர்களுடைய ரசனைக்கு ஏற்ற வகையிலான திரைப்படங்களாக தொடர்ந்து தயாரித்து வரும் ஒரு சில நிறுவனங்களில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் முக்கியமானது. இந்நிறுவனம் தயாரிப்பில் வெளியான ’மாநகரம்’, ‘டாணாக்காரன்’, ’மான்ஸ்டர்’ உள்ளிட்ட அனைத்து படங்களும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றவையாகும்.

 

இதற்கிடையே, பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘இறுகப்பற்று’ வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கணவன் - மனைவி இடையிலான புரிதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் வித்தியாசமான டீசர் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படம் தொடர்பான பல தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

இந்த நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி நேற்று (அக்.3) திரையிடப்பட்டது. பத்திரிகையாளர்கள் மட்டும் இன்றி அவர்களுடைய குடும்பத்தாருக்குமான இந்த சிறப்பு காட்சியில் பங்கேற்று படம் பார்த்தவர்கள் அனைவரும் படத்தை கொண்டாடினார்கள். 

 

காதலிக்கும் போது இருக்கும் காதல்  கணவன் - மனைவி ஆன பிறகு மறைந்து போகும் மாயாஜாலத்தை தம்பதிகளுக்கு புரிய வைத்திருக்கும் இப்படத்தின் கதை, சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் மனதுக்கு நெருக்கமான காட்சிகள் என அனைத்தும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

படம் வெளியாவதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்களிடம் மட்டும் இன்றி பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ‘இறுகப்பற்று’ திருமண வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் காதலை உயிர்பிக்கும் வகையிலான சிறப்பான திரைப்படமாக மட்டும் இன்றி, தம்பதிகள், காதலர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம், என்ற பாராட்டை பெற்றுள்ளதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.

Related News

9278

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery