வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிரான் எழுந்த அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்த நிலையில், ரிலீஸ் பணிகளை தயாரிப்பு தரப்பு துரிதப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான புதிய புரோமோ டீசர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ‘மெர்சல்’ அனைவரையும் மிரள வைப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் ’மெர்சல்’ அதிக திரையரங்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்த ‘பாகுபலி’ யே கேரளாவில் 302 திரையரங்கங்களில் வெளியிடப்பட்ட நிலையில், ’விவேகம்’ 320 திரையரங்கங்களில் வெளியாகி சாதனை படைத்தது, இந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் ‘மெர்சல்’ 350 திரையரங்கங்களில் வெளியிடப்பட உள்ளது.
டீசர் பெற்ற லைக்குகள், யுடியுபில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளரை கவர்ந்த டீசர், ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய திரையரங்கில் பிரீமியர், என்று ‘மெர்சல்’ படம் மூலம் பல பெருமைகளை பெற்று வரும் விஜய், அஜித்தை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...