Latest News :

தஞ்சை மாவட்டத்தில் நடக்கும் சாதி வன்கொடுமைகள் பற்றி பேச வரும் ‘அம்புநாடு ஒம்பதுகுப்பம்’!
Friday October-13 2023

பி.கே.பிலிம்ஸ் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம் ‘அம்புநாடு ஒம்பதுகுப்பம்’. அறிமுக இயக்குநர் ராஜாஜி இயக்கியிருக்கும் இப்படத்தின் நாயகனாக சங்ககிரி மாணிக்கம் நடிக்க, நாயகியாக ஹர்ஷிதா நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு மாணிக்கம், மதன் ரமேஷ் மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடந்த சாதி வன்கொடுமைகள் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவலை மையகாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் சொல்லாத தஞ்சை மாவட்ட சாதி வன்கொடுமைகள் பற்றி பேசியுள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சங்கத்தமிழன், தமிழா தமிழா பாண்டியா, யுடியுப் பிரபலங்கள் மகிழ்னன், மைனர் வீரமணி, பேரலை இந்திரகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரபலங்கள், தற்போது சாதி பற்றி பேசும் படங்கள் எடுத்தாலே அதை சாதி படம் என்று சொல்வதோடு, இப்போதெல்லாம் சாதி வன்கொடுமைகள் நடப்பதில்லை, என்றும் சொல்கிறார்கள். ஆனால், தற்போது பல கிராமங்களில் சாதி வன்கொடுமைகள், சாதி ஒடுக்குமுறைகள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதிலும், தஞ்சை மாவட்டம் என்றாலே, நெல் களஞ்சியம், பெரிய கோவில் பற்றி மட்டுமே பேசுகிறோம், ஆனால் அங்கு நடக்கும் சாதி ஒடுக்குமுறை பற்றி யாரும் பேசுவதில்லை. ‘அம்புநாடு ஒம்பதுகுப்பம்’ உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் என்பதால், தஞ்சை மாவட்டத்தில் நடக்கும் சாதி ஒடுக்குமுறைகளை வெளி உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் படமாக  இருக்கும், என்றார்கள்.

 

ஓ.மகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு அந்தோனி தாசன் இசையமைக்க, ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசையமைத்திருக்கிறார். பன்னீர் செல்வம் படத்தொகுப்பு செய்ய, லாவரதன், கடல்வேந்தன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

கந்தர்வக்கோட்டை, கரம்பகுடி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘அம்புநாடு ஒம்பதுகுப்பம்’ திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

9294

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

Recent Gallery