Latest News :

சர்வதேச விருதுகளை வென்ற ‘கட்டில்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Monday October-16 2023

நடிகர், இயக்குநர், கவிஞர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான இ.வி.கணேஷ் பாபு மேப்பில் லீப் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கட்டில்’. தலைமுறைகளின் வாழ்வியலை சொல்லும் எதார்த்த மற்றும் ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளது.

 

மேலும், படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் ‘கட்டில்’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ‘கட்டில்’ திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Related News

9300

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...