பாலகிருஷ்ணா படத்தை கைப்பற்றிய நாக்ஸ் ஸ்டுடியோஸ்!
Tuesday October-17 2023

பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ராவிப்பூடி இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘பகவந்த் கேசரி’. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இவர்களுடன் அர்ஜுன் ராம்பால், ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். வரும் அக்டோபர் 19 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை சென்னையை சேர்ந்த நாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் வெளியிடும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தரமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சிறந்த திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள நாக்ஸ் ஸ்டுடியோஸ், தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் குறித்த அறிவிப்பையும் விரைவில் வெளியிட உள்ளது. மேலும் பல திரைப்படங்கல் குறித்த அறிவிப்புகளை நாக்ஸ் ஸ்டுடியோஸ் அடுத்தடுத்து அறிவிக்க உள்ளது. 

Related News

9301

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery