சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே திருமணம் மண்டபம் கட்டி வந்த நடிகர் சந்தானம், கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு ரூ.3 கோடி கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சண்முக சுந்தரம், 3 வருடமாக மண்டபத்தை கட்டிக்கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தானம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக நடிகர் சந்தானம் நேரடியாக சண்முக சுந்தரத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்டஹ் நேரம் அங்கு வந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக பேச, அவருடனும் சந்தானம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கு இடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சந்தானம் அடித்ததில் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காயம் ஏற்பட்ட வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், பாஜக தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவராக இருக்கிறார். தகவல் அறிந்ததும், பாஜகவினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க கோஷமிட்டனர்.
இதையடுத்து, சந்தானம் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சண்முகசுந்தரம், பிரேம் ஆனந்த் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்தானம் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. எனவே அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...