இந்திய சினிமா என்றாலே பாலுவுட் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தனது ‘பாகுபலி’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை இந்திய சினிமாவின் அடையாளமாக மாற்றிய நாயகன் பிரபாஸ். தெலுங்கு ரசிகர்களால் ரெபல் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வந்த பிரபாஸ் ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு ஒட்டு மொத்திய இந்திய சினிமா ரசிகர்களால் இந்தியன் ஸ்டார் என்று அழைக்கப்படுவதோடு, இந்திய சினிமாவை உலகளவில் மிகப்பெரிய வியாபாரம் மிக்க சினிமாவாக மாற்றியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த பிரபாஸ், அப்படங்களுக்கு பிறகு நடிக்கும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களாக இருப்பதோடு, ஹாலிவுட் ஆக்ஷன் படங்களுக்கு சவால் விடும் படங்களாகவும் உள்ளது. அந்த வகையில், ‘கே.ஜி.எப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் மீது உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று நடிகர் பிரபாஸ் தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய திரையுலகமே அவருடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே, பிரபாஸின் வானுயர கட் அவுட் அவைத்து ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ‘சலார்’ படக்குழுவும் பிரபாஸின் பிரத்யேக எமோஜை வெளியிட்டு அவரை கெளரவித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவை உலகளவில் வியாபாரம் மிக்கதாக உயர்த்திய நடிகர் பிரபாஸின் இந்த வருட பிறந்தநாளை மிகப்பெரிய கொண்டாட்டமாக மாற்றும் வகையில் மிகப்பெரிய பிரமாண்ட ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ’சலார்’ வரும் டிசம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...