மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தொடங்கிய ‘தளபதி 68’ படப்பிடிப்பு
Wednesday October-25 2023

‘லியோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். விஜயின் 68 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று அழைக்கின்றனர்.

 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் அந்நிறுவனத்தின்  25-வது திரைப்படமாக உருவாகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். 

 

'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைவதோடு, இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் இப்படம் உருவாக உள்ளது.

 

சர்வதேச தரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் பிரசாந்த், நடன சூறாவளி பிரபுதேவா, வெள்ளி விழா நாயகன் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, யோகி பாபு, ஜெயராம், அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

 

சித்தார்தா நுனி ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

படத்தலைப்பு உள்ளிட்ட படம் பற்றிய மேலும் பல விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ள படக்குழு, இப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தொடங்கி வேகமாக நடத்தி வருகிறது.

Related News

9313

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery