Latest News :

பிரபல காமெடி நடிகர் இயக்கத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி!
Wednesday October-25 2023

நடிகராக பிஸியாக இருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருவதோடு, தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவில் படு பிஸியாக இருக்கிறார். இவர் இல்லாத தெலுங்குப் படங்களே இல்லை, என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், அப்பா - மகன் உறவை மையமாக வைத்து உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சமுத்திரக்கனி அப்பாவாக நடிக்க, அவருக்கு மகனாக பிரபல தெலுங்கு காமெடி நடிகர் தன்ராஜ் நடிக்கிறார். இவர்கள் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை நடிகர் தன்ராஜ் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுவரை யாரும் சொல்லாதப்படாத தனித்துவமான கருத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகிறது. ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் பிரபாகர் ஆரிபாக வழங்க, ப்ருத்வி போலவரபு தயாரிக்கிறார். 

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் துவக்க விழா ஐதராபாத்தில் பூஜையுடன் நடைபெற்றது. ‘டியர் காம்ரேட்’ பட இயக்குநர் பரத் மற்றும் இயக்குநர் சுப்பு, சிவபாலாஜி ஆகியோர் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதீர், சம்மக் சந்திரா, தாகுபோத்து ரமேஷ், மது நந்தன், கயூம், பூபால், பிரித்வி, ராக்கெட் ராகவா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

Dhanraj and Samuthirakkani New Movie

 

சமுத்திரக்கனி மற்றும் தன்ராஜ் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மோக்‌ஷா, ஹரிஷ் உத்தமன், பிரித்வி, அஜய் கோஷ், லாவண்யா ரெட்டி, சிலம் ஸ்ரீனு, பிரமோதினி, ராக்கெட் ராகவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

’விமானம்’ படத்தின் இயக்குநர் சிவபிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு மாலி வசனம் எழுதுகிறார். துர்கா பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் சிறுவேறு இசையமைக்கிறார். மார்த்தாண்டம் கே.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்ய, டெளலூரி நாராயணா கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

 

வரும் நவம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத், சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. 

Related News

9314

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

Recent Gallery