Latest News :

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் சூர்யா மகள்!
Tuesday October-10 2017

பாலா இயக்கத்தில், வெற்றி பெற்ற தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக் மூலம் ஹீரோவாக களம் இறங்க உள்ள நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக, ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் சூர்யாவின் மகள் வேடத்தில் நடித்த ஷ்ரியா ஷர்மா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பல வருட போராட்டத்திற்கு பிறகு 1999ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்த விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமை ஹீரோவாக களம் இறக்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முழுக்க முழுக்க புதுமுகங்களின் பங்களிப்பில், குறைந்த முதலீட்டில் வெளியாகி, தென் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தன் துருவ் நடிக்கிறார். இப்படத்தை சேது படத்தின் மூலம் விக்ரமுக்கு வாழ்க்கை கொடுத்த பாலா இயக்குகிறார்.

 

இதற்கிடையே, இப்படத்தின் ஹீரோயின் தேர்வை தொடங்கியுள்ள படக்குழுவினர் ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு மகளாக நடித்த ஷ்ரியா ஷர்மாவை நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் இப்படத்திற்கான ஹீரோயின் தேர்வு பட்டியலில் இருக்கிறாராம்.

Related News

932

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery