Latest News :

எதிர்மறை விசயங்களை வைத்து உருவாகியுள்ள விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ திரைப்படம்!
Saturday November-04 2023

அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் ‘ரெய்டு’. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். இவரக்ளுடன் ரிஷி, செல்வா, செளந்தரராஜன், இயக்குநர் வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

எம் ஸ்டுடியோஸ், ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் எஸ்.கே.கனிஷ்க் மற்றும் ஜி.கே என்கிற ஜி.மணிகண்டன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியிருக்கிறார். கதிரவன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். வீரமணி கணேசன் கலை இயக்குநராக பணியாற்ற, கே.கணேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ரெய்டு’ திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம் பிரபு, “எதிர்மறை விசயங்களை வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளை தான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார்.” என்றார்.

 

இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் முத்தையா பேசுகையில், “கொம்பன்', 'மருது' போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என 'ரெய்டு' படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் 'டாணாக்காரன்' நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. 'ரெய்டு' படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும்” என்றார்.

 

இயக்குநர் கார்த்தி பேசுகையில், “இது என்னுடைய முதல் படம். இந்த சந்தோஷத்தைக் கொடுத்த முத்து மாமாவுக்கு நன்றி. விக்ரம் பிரபு எனக்கு அண்ணன் போல. அந்த அன்பு கடைசி வரை இருக்கும். ஸ்ரீதிவ்யா சிரித்த முகமாகவே இருப்பார். என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்த அனைவருக்கும் நன்றி. படம் 10ஆம் தேதி வெளியாகிறது” என்றார்.

 

இயக்குநர் வேலு பிரபாகரன் பேசுகையில், “இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்திக், விக்ரம் பிரபு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. என்னை ஒரு இயக்குநராக அறிமுகப்படுத்தியதில் நடிகர் பிரபுவுக்கு முக்கிய பங்குண்டு. அப்படியானவரின் மகனுடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த நாட்டை கீழான நிலையில் இருந்து மீட்க கலைஞர்கள் முக்கியம். சாதி ஒழிப்பு, சனாதனத்தை கலை மூலம் முன்னெடுக்க வேண்டும். இதற்கான போராட்டத்தை இயக்குநர் முத்தையா முன் நின்று நடத்த வேண்டும். சனாதானம் என்பது அரசியல் தொடர்பானதோ அல்லது பெரிய சம்மந்தமானதோ இல்லை. இவன் தாழ்ந்தவன், இவர் உயர்ந்தவன் என மக்களை பிரித்து பார்க்கும் சாபக்கேடு, அதை ஒழிக்க கலைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.” என்றார்.

 

Raid

 

நடிகை ஸ்ரீதிவ்யா பேசுகையில், “’ரெய்டு’படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். 'மருது' படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார். 

 

நடிகர் செல்வா பேசுகையில், ”வலிமை' படத்தில் இருந்து தொடர்ந்து நான்காவது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என் அப்பாவுக்காக போலீஸ் கதாபாத்திரங்கள் செய்வேன். போலீஸ் பற்றி நிறைய நெகட்டிவான விஷயங்கள் வருகிறது. அவர்கள் பற்றி நல்லது வைரல் ஆவதில்லை. அப்பாவின் நினைவாக என் சம்பளத்தில் இருந்து சில நல்ல விஷயங்கள் செய்ய இருக்கிறேன். ரெய்டு படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

 

பாடலாசிரியர் மோகன் ராஜா பேசுகையில், “இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் படங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு லாபம் தரக்கூடியதாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்” என்றார். 

 

ஒளிப்பதிவாளர் கதிரவன் பேசுகையில், ”இந்தப் படத்தில் நான் வேலை செய்ய முக்கிய காரணமாக இருக்கும் முத்தையா அண்ணனுக்கு நன்றி. இன்று தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்து விட்டது. உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்துவதுதான் ஒளிப்பதிவாளருக்கு இருக்கும் பெரிய சவால் என்று நினைக்கிறேன். முடிந்தளவு அதை சரியாக இந்தப் படத்தில் கையாண்டுள்ளேன். என்னுடைய பார்வையில் எல்லா கலைஞர்களையும் வேறு விதமாக காட்ட முயற்சித்துள்ளேன். படத்தில் என்னை ஊக்குவித்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் பேசுகையில், “கமர்ஷியல் படத்துக்கு ஏற்ற ஆக்‌ஷன் விஷயங்களை இதில் கொடுத்துள்ளோம். விக்ரம் பிரபு சார் அருமையாக செய்துள்ளார். இயக்குநர் முதல் படத்திற்காக கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். ரெய்டு தீபாவளிக்கு சரவெடியாக இருக்கும்” என்றார்.

 

நடிகர் ரிஷி பேசுகையில், ”முத்தையா, விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. சண்டைக் காட்சிகளை முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளேன். எல்லோருக்கும் நன்றி” என்றார். 

 

நடிகர் செளந்தரராஜன் பேசுகையில், ”நாளைக்கு ஷூட்டிங் எனும் போது என்னை அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள். முத்தையா அண்ணனிடம் படம் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. 'குட்டி புலி' படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதனால் இந்தப் படத்தின் வாய்ப்பு வந்தபோது கதை கேட்காமல் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் கார்த்தி சிறப்பாக செய்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளோடு இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா என அனைவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். எல்லோருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

Related News

9326

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery