Latest News :

’டைகர் 3’ யின் புதிய புரோமோ வீடியொவை வெளியிட்ட படக்குழு!
Sunday November-05 2023

சல்மான் கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஏக் தா டைகர்’ மற்றும் ‘டைகர் ஜிந்தா ஹை’ படங்களை தொடர்ந்து ‘டைகர் 3’ திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமான ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. பால்லிவுட் சினிமாவின் பிரமாண்ட பட தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு ஸ்பை யுனிவர்ஸ் படமான இப்படம் ’ஏக் தா டைகர்’, ’டைகர் ஜிந்தா ஹை’, ’வார்’, ‘பதான்’ ஆகிய படங்களுடன் தொடர்பு கொண்ட ஸ்பை கதையம்சம் கொண்டதாகும்.

 

தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 12 அம தேதி வெளியாகும் இப்படத்தின், டீசர், டிரைலர் மற்றும் “லேகே பிரபு கா நாம்” ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், டைகர் மீண்டும் திரும்புகிறார், என்பதை அறிவிக்கும் விதமாக 50 விநாடிகள் ஓடும் புரோமோ வீடியோ ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

 

இந்த ஆக்சன் புரோமோவில் தீமையின் மொத்த மூளையாக செயல்படுபவனும், படத்தில் சூப்பர் ஏஜென்ட்டான டைகரின் விரோதியுமான இம்ரான் ஹாஸ்மியால் சல்மான் கான் மிரட்டப்படுகிறார். இந்தியாவை இரக்கமற்ற முறையில் துன்புறுத்துவேன் என்றும் இந்தியர்களை வேட்டையாடி வீழ்த்துவேன் என்றும் வெறித்தனமாக அறிவிக்கிறார் இம்ரான் ஹாஸ்மி’. 

 

 

இந்திய சினிமாவின் மிகப்பெரிய மெகாஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் ‘டைகர் 3’யில் பெருமைமிக்க டைகர் மற்றும் சோயா என்கிற தங்களது சூப்பர் ஏஜென்ட் கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்திருக்கிறார்கள்.  ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கியுள்ள இந்த ‘டைகர் 3’ இந்த வருடம் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறு தீபாவளியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும்  வெளியாகிறது.

Related News

9328

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

Recent Gallery