Latest News :

’கண்ணப்பா’ படத்திற்காக நியூசிலாந்தின் வியக்கத்தகுகு இடங்களை தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தும் விஷ்ணு மஞ்சு!
Thursday November-09 2023

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ தற்போது இந்திய சினிமா வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் மிக முக்கியமான படமாக உருவெடுத்துள்ளது. அப்படத்திற்காக விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பிரமாண்டமானதாக இருப்பதோடு, ரசிகர்களை கவரக்கூடிய வியக்க வைக்கும் திரைக்காவியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.

 

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களோடு உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படம் நியூசிலாந்தின் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளில் படமாக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்தின் அழகிய பின்னணியில் சுமார் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட இருக்கும் நிலையில், ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ போன்ற பழம்பெரும் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட விஷ்ணு மஞ்சு, கிழக்கு மற்றும் மேற்கத்திய யுக்திகளை ஒன்றிணைத்து ஒரு தனித்துவமான மற்றும் வசீகரிக்கும் திரைப்பட அனுபவத்தை கொடுக்கும் விதமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

 

இது குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு கூறுகையில், “நியூசிலாந்து கடவுளின் சிறந்த ஓவியம் என்று நான் நம்புகிறேன். நியூசிலாந்தின் அழகு ‘கண்ணப்பா’-வுக்கு சரியான அமைப்பாக இருக்கும். இது படத்தின் சுவாரஸ்யத்தை மேம்படுத்துவதோடு, சிவபெருமானின் பக்தியுடன் கூடிய ‘கண்ணப்பா’-வின் பிரமிக்க வைக்கும் உண்மைக் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் படம் அறிவிக்கப்பட்டது, மற்றும் படத்தின் கதையில் இந்த கோவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கண்ணப்பன் தன் இரு கண்களையும் சிவலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்ய தயாரக இருந்த தலம் இது.

 

நியூசிலாந்தின் கம்பீரமான நிலப்பரப்புகளையும், அதிநவீன சினிமா தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, பார்வையாளர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கலைப் படைப்பை உருவாக்குவதே என் நோக்கம். நியூசிலாந்தின் சிறந்த கேன்வாஸில் தொடங்கி, அதன் வகையின் மிகச் சிறந்த திரைப்படத்தை உருவாக்க நாங்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம். அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, உயர்மட்ட திறமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். திரைப்பட வரலாற்றில் பொறிக்கப்படும் மற்றும் வரும் தலைமுறையினரால் போற்றப்படும் தலைசிறந்த சினிமா படைப்பாக ‘கண்ணப்பா’ இருக்கும்.” என்றார்.

 

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவ ராஜ்குமார், பிரபாஸ் மற்றும் சரத்குமார் போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

கண்ணப்பன் தன் இரு கண்களையும் சிவலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்ய தயாராக இருந்த தலமான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ‘கண்ணப்பா’ திரைப்படம் தொடங்கியதோடு, கதையில் அந்த கோவில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9332

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery