Latest News :

”நல்லவனை நல்லவனா நடிக்க வச்சிட்டீங்களே” - கவனம் ஈர்க்கும் ஜெயம் ரவியின் ‘சைரன்’ டீசர்
Tuesday November-14 2023

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ்  இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘சைரன்’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, காவல்துறை அதிகாரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெறுள்ளது. சிறை கைதியான ஜெயம் ரவி, சிறையில் இருந்து பரோலில் வருகிறார், எதற்காக வருகிறார், என்ன செய்யப் போகிறார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள டீசரில், “நீங்க நல்லவனை நல்லவனா நடிக்க வச்சிட்டீங்களே” என்ற வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

 

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் டீசர் வெளியிடுவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ், “கதை காஞ்சிபுரத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஜெயம் ரவிக்கும் கீர்த்தி சுரேஷ் ஜோடி இல்லை, அனுபமா பரமேஸ்வரன் தான் ஜோடி. இதுவரை போலீஸ் வேடத்தில் நடிக்காத நடிகையை போலீஸாக நடிக்க வேண்டும் என்று நினைத்தோம், அதனால் தான் கீர்த்தி சுரேஷை போலீஸ் வேடத்தில் நடிக்க வைத்தோம்.

 

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் தற்போது வெளியாகியிருக்கும் டீசர் வரை படம் சார்ந்த ஒவ்வொரு விசயத்தையும் வெளிப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தான், சிறையில் இருந்து பரோலில் வரும் கைது என்ன செய்யப்போகிறார், என்பதை இந்த டீசர் சொல்கிறது. அடுத்ததாக டிரைலரை வெளியிடும் போது, கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை சொல்வோம்.” என்றார்.

 

மேலும், தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் முறையாக சைரன் படத்தில்  சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுவது இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் ’சைரன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

 

மிகப்பிரமாண்ட பொருட்செலவில்,  குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.  காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

 

 

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

Related News

9338

விஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் 'டயங்கரம்' படம் தொடங்கியது!
Monday October-27 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் 'டயங்கரம்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல் ஏ ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது...

வியப்பில் ஆழ்த்தும் மாதவனின் புதிய மாற்றம்!
Monday October-27 2025

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி...

நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சினிமாவைச் சீரழிக்கின்றதா? – இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்!
Monday October-27 2025

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்...

Recent Gallery