ஒரு திரைப்படம் என்பதையும் தாண்டி சில படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். காரணம், அப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விசயம், அதை சொல்லிய விதம் என அனைத்து வகையிலும் அப்படம் தனித்துவமானதாக இருக்கும். அப்படி ஒரு படமாக உருவாகியிருக்கிறது ‘கொட்டேஷன் கேங்க்’.
நம் கண்ணுக்கு தெரியாமல் நம் சமுதாயத்துக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் நிழல் உலக தாதாக்கள் குழு அல்லது பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படை குழுவினரை பற்றிய கதையாக இருந்தாலும், அதையும் தாண்டி நமக்கு தெரியாத ஒரு போதை உலகத்தில் சிக்கி இளைஞர்கள் சீரழிந்துக் கொண்டிருக்கிறார்கள், என்ற அதிர்ச்சிகரமான தகவலையும், அதன் பின்னனியையும் சொல்கிறது இந்த ‘கொட்டேஷன் கேங்க்’.
பிரியா மணி, சாரா, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை விவேக் கே.கண்னன் இயக்கியிருக்கிறார். காயத்ரி சுரேஷ், விவேக் கண்ணன் ஆகியோருடன் இணைந்து பிலிமினாட்டி எண்டர்டெயின்மெட்ன் மற்றும் ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸுக்காக தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்ட இயக்குநர் விவேக் கே.கண்ணன், “’கொட்டேஷன் கேங்’ என்ற வார்த்தை கேரளாவில் பிரபலமானது. ஆனால், படம் அவர்களை பற்றியது அல்ல, அந்த வார்த்தை எனக்கு பிடித்திருந்ததால் அதை மட்டும் எடுத்துக்கொண்டேன், மற்றபடி கேரள கொட்டேஷன் கேங்குக்கும் இந்த படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படிப்பட்ட கும்பலை பற்றி கதையில் சொல்லப்பட்டாலும், அதை மட்டுமே முழு கதையாக அல்லாமல், வேறு சில கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுடைய கதையை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
மிக முக்கியமாக நமக்கு தெரியாத பல போதை பழக்கங்கள் இங்கு இருக்கின்றன. அதற்கு இளைஞர்கள் அடிமையாகி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள். குறிப்பாக அந்த போதை பொருட்கள் பற்றி பெற்றோர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கும் எதுவும் தெரிவதில்லை, அவர்களுக்கு தெரிந்த போதை மது மட்டுமே. ஆனால் அதை தாண்டிய ஒரு போதை உலகம் இங்கு இருக்கிறது என்றும், அதில் சிக்கிக்கொள்ளாமல் இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்று படத்தில் சொல்லியிருக்கிறோம். சாரா போதைக்கு அடிமையானவராக நடித்திருந்தாலும், போதை பழக்கத்திற்கு ஆளாகி, அதில் இருந்து ஒருவர் மீண்டு வர முடியும், என்ற விசயத்தை சொல்லும்படியாக தான் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்த படத்தின் பல காட்சிகள் ராவாக இருக்கும். குறிப்பாக பிரியாமணி குழுவினரின் கொலை, சண்டைக்காட்சிகள் எல்லாமே ராவாக இருக்கும். அப்படிப்பட்ட காட்சிகளுக்காக சில ரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். வெறும் வன்முறையும் தீய பழக்கங்களை பற்றி மட்டுமே சொல்லும் படமாக இல்லாமல் இந்தப் படம் நிச்சயமாக ஒரு விழிப்புணர்வுப் படமாக இருக்கும். அதைப்போல் இந்த படத்தை இளைஞர்களை விட பெற்றோர்கள் பார்க்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். காரணம், அவர்கள் இங்கு என்ன நடக்கிறது, என்ற உண்மையை தெரிந்துக்கொண்டால் தான் தங்களது பிள்ளைகளை பாதுக்காக்க முடியும், அதனால் இந்த படத்தை இளைஞர்கள் பார்க்கவில்லை என்றாலும் கூட பெற்றோர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.” என்றார்.
படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பற்றி கூறிய இயக்குநர் விவேக் கண்னன், “சாராவின் பருவத்தில் இருக்கும் பெண்தான் இதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று அவரது தந்தை அர்ஜுனிடம் பேசிய போது அவர் மகள் இப்படி நடிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால், படத்தின் தன்மைகளை அவருக்குத் தெளிவாக எடுத்துரைத்து இதனால் எந்த பாதிப்பும் வராது என்று புரிய வைத்தே அவரை ஒத்துக்கொள்ள வைத்தேன். சின்னப் பெண் சாராவும் நான் சொல்வதைப் புரிந்து கொண்டு மிக அழகாக நடித்திருக்கிறார்.அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாதவாறு நான் மிகவும் பொறுப்புடன் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக நினைக்கிறேன்.
இதே போல் தான் இந்த படத்துக்குள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, விகாஸ் வாரியர் முதலானவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்று இருக்கும் பாத்திரங்களும் கூட இதுவரை நாம் அதிகம் அறிந்திடாத நிழல் உலகத்தைப் பற்றியே இருக்கும்.
இந்தப் படத்துக்கு வித்தியாசமான இசை வேண்டி டிரம்ஸ் சிவமணியை ஒப்பந்தம் செய்தேன். அவரும் தன்னுடைய அதிகபட்சத திறமையை வைத்து இந்தப் படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் அற்புதமாக அமைத்திருக்கிறார்.
அதைப்போல் அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவும். இந்தப் படத்துக்கு புதிய நிறத்தை தந்திருக்கிறது.” என்றார்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...