Latest News :

தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதிக்கும் சாக்‌ஷி அகர்வால்!
Wednesday November-15 2023

பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம்  அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்‌ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்‌ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது. 

 

தமிழில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு, இந்த தீபாவளி பான் இந்திய தீபாவளியாக அமைந்திருக்கிறது. நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில் அரை டஜன் படங்களில்  ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாது,  கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பல மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவருக்கு இந்த தீபாவளி மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கிறது. 

 

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார் சாக்‌ஷி. 

 

தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, ரஜித் கண்ணா இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படமான 'சாரா'வில் பரபரப்பாக நடித்து வருகிறார். மேலும், '8 தோட்டாக்கள்' புகழ் வெற்றி ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன், 'கெஸ்ட் 2' உட்பட அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் சாக்‌ஷி அகர்வால். 

 

க்யூட் ஹீரோயினாக கலக்கி வரும் சாக்‌ஷி அகர்வாலுக்கு, தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து,  பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் சாக்‌ஷி அகர்வாலை பாலிவுட் படத்திலும் காணலாம். ஆக, தமிழ் சினிமா நடிகையான சாக்‌ஷி அகர்வால் தற்போது பான் இந்தியா நடிகையாக உருவெடுத்து கோலிவுட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

Related News

9341

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery