Latest News :

டெல்டா மாவட்டத்தின் சாதி வன்கொடுமைகள் பற்றி பேசும் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’! - நவம்பர் 17 ஆம் தேதி வெளியாகிறது
Wednesday November-15 2023

பூபதி கார்த்திகேயன் தயாரிப்பில், ஜி.ராஜாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’. டெல்டா மாவட்டத்தில் நடைபெற்ற சாதி வன்கொடுமைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இப்படத்தை பார்த்து பாராட்டியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமம், அங்கே பல சமூக மக்கள் வாழ்கிறார்கள். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து விடக்கூடாது என்கிற பிற்போக்குத்தனமான பழைமை வாத சிந்தனையை உள்வாங்கிய ஊர். சக மனிதனை  சமமாக ஜாதியின் பெயரால், தீண்டாமை மற்றும் அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டும் என்கிற அதிகார  மமதையில்  எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிற ஜாதி படிநிலையை காப்பாற்ற துடிக்கிற, அதிகாரத்தை கைப்பற்றி வைத்துக் கொள்ள வேண்டும் அதன் வழியாக ஊரை ஆள வேண்டும் என்கிற வெறியோடு இரு தரப்பு பண்ணையார்கள்,  கோவில் திருவிழா வருகிறது திருவிழாவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கோவில் பூசாரி வைத்திருந்த தாம்பூலத்தட்டை தொட்டு விபூதி எடுத்து விடுகிறார்கள். 

 

இதனால் அங்கு கலவரம் ஏற்படுகிறது, பண்ணையார்கள்  தங்களுக்குள் இருக்கும் அதிகார பகையை ஒதுக்கிவைத்து விட்டு, பண்ணையார்கள் இருவரும் ஒன்று சேர்ந்து,  தாம்பூலத் தட்டை தொட்டது தீட்டாகிவிட்டது எனக் கூறி நாட்டு கூட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள் அதே பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக விடுதலைக்காக போராடக்கூடிய அரசியல் இயக்கம்  நாட்டு கூட்டத்திற்கு போகக்கூடாது சட்டப்படி பிரச்சனையை எதிர்கொள்வோம் எனக்கூறி பட்டியல் சமூக மக்கள் பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் இதை அறிந்த பண்ணையார்கள், கட்சிக்காரரிடம் நாம் தோற்றுவிடக்கூடாது  தங்களது ஜாதி கௌரவத்திற்கு  இழிவு ஏற்பட்டுவிடும் என கருதி தாம்பூல தட்டை தொட்டு விபூதி எடுத்த இளைஞரை மர்ம கொலை செய்து விடுகிறார்கள்.

 

டெல்டா மாவட்டங்களில் நடக்கும் சாதி வன்கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கி இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ராஜாஜி, இயக்குநர்கள் பா.இரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்றவர்கள் வரிசையில் தலித் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசும் வகையில் மட்டும் இன்றி, நாடு என்ற கட்டமைப்பில் அம்மக்கள் எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை பேசியிருப்பதால் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

வரும் நவம்பர் 17 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’ திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

மகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசையமைத்துள்ளார். லாவ் வரதன் மற்றும் கடல் வேந்தன் பாடல்கள் எழுதியுள்ளனர். பன்னீர் செல்வம் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Related News

9342

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery